டாஸ்மாக் லாரி தீ வைக்கப்பட்ட சம்பவம்: வேல்முருகனுக்கு கோர்டடு முன்ஜாமின்

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே  டாஸ்மாக் லாரிக்கு தீ வைக்கப்பட்ட  வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு உயர்நீதி மன்ற மதுரைக்கிளை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

சுங்கச்சாவடி தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 1ந்தேதி  திண்டுக்கல் மாவட்டம் எரியோடு டாஸ்மாக் குடோனில் இருந்து டாஸ்மாக் மது பானங்கள்   ஏற்றிச்சென்ற லாரி மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.  இதுபரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு வேல்முருகன் காரணம் என்று கூறி, காவல்துறையினர், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு வேல்முருகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.  அப்போது காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, வேல்முருகன் தூண்டுதல் காரணமாக தீ வைக்கப்பட்டது என்பதற்காக ஆதாரம் இல்லை என்பதால், அவருக்கு முன்ஜாமின் வழங்குவதாக கூறி உத்தரவிட்டார்.