பாலிவுட் நடிகர் அமீர் கானை கொலைக்குற்றவாளியாக்கிய பாகிஸ்தான் டிவி…!

பாகிஸ்தானில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் கொலை வழக்கில் எம்.க்யூ.எம் தலைவர் அமீர் கான் குற்றவாளி எனும் செய்தியில்,குற்றவாளி அமீர் கானுக்குப் பதிலாக இந்திய நடிகர் அமீர் கானின் புகைப்படம் ஒளிபரப்பாகியுள்ளது.

இந்த தவறு சரி செய்யப்பட்டாலும், ஒளிபரப்பான காட்சியின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் செய்தியாளர் நைலா இனாயத் மட்டும் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். எனினும், இது தொடர்பாக டிவி சேனல் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.