ஆளுநர் மாளிகை முற்றுகை : ஸ்டாலின் உள்பட 1111 பேர் மீது வழக்கு

சென்னை

நேற்று அளுநர் மாளிகையை முற்றுகை இட்டு போராட்டம் செய்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட 1111 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை எதிர்த்து திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.   அப்போது நாமக்கல்லில் கருப்புக் கொடி காட்டி 293 பேர் கைதானதை கண்டித்து திடீரென கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற தீர்மானிக்கப்பட்டது.

இதை ஒட்டி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.  அவருடன் ஜெ அன்பழகன், சேகர்பாபு, ரங்கநாதன், மா சுப்ரமணியன்,  வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

அப்போது ஸ்டாலின் ஆளுநர் பாஜகவின் பிரதிய்நிதியாக செயல் பட்டு வருவதாகவும் அதனால் அவரை எதிர்த்து போராட்டம் நடத்துவதாகவும்   தெரிவித்தார்.  அத்துடன் கருப்புக் கொடி காட்டுவது ஜனநாயக நடைமுறை எனவும் அதற்காக கைது செய்வ்து தவறானது எனவும் பேசி உள்ளார்.   காவல்துறையினர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை கைது செய்தனர்.

ஆளுநர் மளிகையை முற்றுகை இட்டது தொடர்பாக முக ஸ்டாலின் உள்ளிட்ட 1111 பேர் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.   இவர்கள் மீது சட்ட விரோதமாக அனுமதியின்றி கூடியதாகவும், அதிகாரிகளின் உத்தரவை அவமத்தித்தகாவும்  கிண்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.