போலி சான்றிதழ்: ஏவிவிபி முன்னாள் மாணவர் தலைவர் அங்கிவ் மீது வழக்கு பதிவு

டில்லி:

போலி சான்றிதழ் மூலம் டில்லி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு சேர்ந்த ஏவிபிவி மாணவர் சங்க தலைவர்  அங்கிவ் பசாயாவின் சேர்க்கையை டில்லி பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ள நிலை யில், அவர்மீது காவல்துறை பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து டில்லி பல்கலைக்கழகம் சார்பில், புத்திஸ்ட் ஆய்வுகள் துறைத் தலைவர் கே.டி.எஸ். சாரா   புகார் அளித்ததை  தொடர்ந்து டில்லியில் உள்ள மோரிஸ்நகர் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அங்கிங் பசோயா (முன்னாள் மாணவர் சங்க தலைவர்) மீது ஐபிசி செக்சன் 420, 468 மற்றும் 471 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ப்பட்டு உள்ளது. விரைவில் விசாரணை நடைபெறும் என்றும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

அங்கிவ் பசோயா (வட்டத்திற்குள் இருப்பவர்)

டில்லி பல்கலைக்கழக தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏபிவிபி மாணவர் சங்க தலைவர் அன்கிவ் பசோயா, போலி சான்றிதழ் கொடுத்து  டில்லி பல்கலைக்கழகத்தில்  மேற்படிப்பு சேர்ந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர்மீது பல்கலைக்கழகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

டில்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. புத்திஸ்ட் பாடப்பிரிவு எடுத்து படித்து வந்தவர் அங்கிவ் பசோயா, இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் ஏவிபிவி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவர்  அவர் மேற்படிப்புக்காக தாக்கல் செய்த சான்றிதழ்கள் போலியானது என நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவர் மாணவர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ஏவிபிவி அமைப்பும் வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில், அன்கிவ் பசோயாவின் மேற்படிப்பை ரத்து செய்து  டில்லி பல்கலைக்கழகமும் அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தது.