ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு! 4 வாரம் ஒத்திவைப்பு

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, இந்த விவகாரம் தொடர்பாக,  3 ஆண்டுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதனைத்தொடர்ந்து திமுக சார்பில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதனை சமீபத்தில் விசாரித்த நீதிபதிகள் சபாநாயகர் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகர் தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்ற உச்சநீதிமன்றம், வழக்கின் அடுத்த  விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.