சமூக ஆர்வலர் சுந்தரவள்ளி மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மூக ஆர்வலர் சுந்தரவள்ளி மீது கடுமையான பிரிவுகளின் கீழ் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

பேராசரியை சுந்தரவள்ளி, பட்டிமன்ற பேச்சாளர், ஆய்வாளர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர், த.மு.எ.க.ச.வில்  . மாநில துணை செயலாளராக உள்ளார்.

சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய போது ஆளுநர் மற்றும் அரசை கடுமையாக விமர்சித்து இவர் பேசியதாகவும் மதங்களுக்கிடையே பிரிவினையைத் தூண்டும்படி பேசியதாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் மீது, 153, 153 A (1)(a), 505 (1) (b), 505 (1 ) (c) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இரண்டு சமூகங்களுக்கிடையே மோதல் உருவாக்கி அதன் மூலம் கலவரத்தை உருவாக்குவதும் , இரண்டு மதங்களுக்கிடையே தேவையற்ற , ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி மத மோதலை உருவாக்குபவர்கள் மற்றும் கெட்ட எண்ணத்துடன் வேண்டுமென்றே உண்மைக்கு மாறான செய்தி என்று தெரிந்தும் கூட வதந்தியாக பரப்பி அதன் மூலம் பொது அமைதிக்கும் , பொது ஒழுங்கிற்கும் ஊறு விளைவிப்பவர்களை தண்டிக்கும் வகையில் மேற்கண்ட சட்டப் பிரிவுகள் வகை செய்கிறன. . இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க வகை செய்யும்.

திருமுருகன்காந்தி, முகிலன், வளர்மதி, பியூஷ் மனுஷ், முகிலன் ஆகியோர் வரிசையில் தற்போது சுந்தரவள்ளி மீது கடுமையான பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு, சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சுந்தரவள்ளி தனது முகநூல் பக்கத்தில், “தமிழக காவல்துறை என்மீது பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது…

மிக்க மகிழ்ச்சி… களத்தில் சந்திப்போம்…” என்று பதிவிட்டுள்ளார்.