டில்லி:

ஆர்.கே.நகரில் ஒரு ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் விநியோகம் செய்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இதை மிஞ்சும் அளவுக்கு ஒரு ஒட்டுக்கு ரூ. 50 ஆயிரம் விநியோகம் தற்போது நடந்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.

நாகாலாந்து சட்டமன்ற தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் அகவி என் சிமோமி ஒருவர் தான் சொத்து இல்லாத வேட்பாளராக உள்ளார். 193 வேட்பாளர்களில் 114 பேர், அதாவது 59 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்று ஜனநாயக மறுசீரமைப்பு சங்க ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறிய மாநிலத்தில் கோடீஸ்வர அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலின் முதல் 3 இடத்தில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ரமோங்கோ லோதா ரூ.38.92 கோடி, பாஜக வேட்பாளர் கிஷி ரூ. 38.2 கோடி, ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளரான முன்னாள் முதல்வர் நெய்ப்யூ ரியோ ரூ.36.41 கோடியுடன் உள்ளனர்.

20 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாகாலாந்தில் கோடீஸ்வர வேட்பாளர்கள் மற்றும் வெற்றி பெறும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளாக படிப்படியாக உயர்ந்துள்ளது. 2008ம் ஆண்டில் 27 சதவீதம் பேர் கோடீஸ்வர வேட்பாளரகள். வெற்றி பெற்றவர்களில் 40 சதவீதம் பேர் பல கோடி ரூபாய்களில் சொத்து மதிப்பை வெளியிட்டனர். 2013ம் ஆண்டில் 45 சதவீத கோடீஸ்வர வேட்பாளர்கள் பே £ட்டியிட்டனர். இதன் சொத்து மதிப்பு ரூ. 300 கோடியாகும். வெற்றி பெற்றவர்களில் 62 சதவீதம் பேர் கே £டீஸ்வரர்கள்.

நாகாலாந்தில் தேர்தல் என்பது பண திருவிழாவாக மக்கள் நினைக்கும் நிலை தான் அங்கு உள்ளது என்பதை மக்கள் நலச் சங்கங்கள் ஒத்துக் கொள்கின்றன. அங்கும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது என்று புகார்கள் எழுந்துள்ளது. கடந்த தேர்தலை விட இரு மடங்கு பணம் இந்த முறை விநியோகம் செய்யப்படுகிறது.

மன் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியை சேர்ந்த ஒரு வேட்பாளர் ஒரு ஓட்டுக்கு ரூ. 30 ஆயிரம் வரை விநியோகம் செய்துள்ளார். இந்த போட்டியை சமாளிக்கும் வகையில் மற்றொரு வேட்பாளர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் விநியோகம் செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேக் மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் கடந்த மாதம் 27ம் தேதி முதல் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ரூ. 3 ஆயிரம் விநியோகம் செய்துள்ளார். தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட பழங்குடி இன மக்கள் வசிக்கும் ப குதியில் இவர் தான் முதல் வேட்பாளராக மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தேர்தல் கமிஷனுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.