டில்லி

ணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு இருந்ததை விட தற்போது ரொக்கப் பணப் புழக்கம் 19.13% அதிகரித்துள்ளது

கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது.   இதை ஒட்டி நாட்டு மக்கள் தங்களிடம் உள்ள ரொக்கப் பணத்தை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொண்டனர்.  அப்போது வங்கிகளில் ரூ17.97 லட்சம் ரொக்கப்பணம் மாற்றப்பட்டது.  ரிசர்வ் வங்கி கணக்குப்படி புழக்கத்தில் உள்ள ரொக்கம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளது.

ரொக்கப் பணப் புழக்கத்தை குறைக்க அரசு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை பெரிதும் ஊக்குவித்தது.    பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பலரும் ரொக்கப் பணம் கையிருப்பு இல்லாததால் டிஜிட்டல் முறைக்கு மாறினார்கள்.   அதற்குப் பிறகும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதனால் நாட்டில் ரொக்கப் பணப்புழக்கம் பெருமளவில் குறைந்தது.  இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த வருடம் மார்ச் 15 ஆம் தேதி அன்றைய கணக்கின்படி நாட்டில் ரொக்கப்பணப் புழக்கம் ரூ.21.14 லட்சம் கோடி உள்ளது.   இது பணமதிப்பிழப்பு சமயத்தில் இருந்த 17.97 லட்சம் கோடியை விட 19.14% அதிகம் ஆகும்.

இது குறித்து வங்கி அதிகாரிகள், “சாதாரணமாக தேர்தல் நேரத்தில் ரொக்கப் பணப் புழக்கம் அதிகரிக்கும்.  அத்துடன் மழைக்காலத்துக்கு பிறகு அறுவடை தொடங்குவதால் ரொக்கத் தேவை அதிகரிக்கும்.  இதைத் தவிர விழாக்காலங்களில் தங்கம், கார் மற்றும் பைக்குகள் வாங்குவதால் ரொக்கப் பணப் புழக்கம் அதிகரிக்கும்.” என தெரிவித்துள்ளார்.