இம்பால்:
ணிப்பூர் குண்டு வெடிப்பு குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்க பரிசு அளிக்கப்படும் என்ற மணிப்பூர் போலீசார் அறிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இம்பாலில் உள்ள ஒரு செய்தித்தாள் அலுவலகத்தில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ .50,000 ரொக்க பரிசு வழங்கப்படும் என்று மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த போலீசார், அடையாளம் தெரியாத ஒரு பெண் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கையெறி குண்டு வெடிப்பு நடந்த செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி சேனல் அலுவலம் வழக்கம் இயக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், அனைத்து மணிப்பூர் உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் (AMWJU) மற்றும் எடிட்டர்ஸ் கில்ட் மணிப்பூர் (EGM) தலைமையிலான நடைபெற்று வந்த காலவரையற்ற போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.