வரலாற்றில் முதல் முறையாக சென்னை காசினோ திரையரங்கம் வெளி வாகன நிறுத்துமிடமாக மாற்றம்….!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச்.24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்ததாக தற்போது வரை 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா முழுக்கவே கொரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. மேலும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையரங்குகளும் மூடப்பட்டன.

தியேட்டர்கள் திறக்க முடியாத நிலையில் சென்னையில் உள்ள பிரபல காசினோ திரையரங்கம் முதல் முறையாக வாகனம் நிறுத்துமிடமாக மாறியுள்ளது .

தொடர் ஊரடங்கு, ஆன் லைனில் புதிய படங்கள் வெளியீட்டால் திரையரங்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .

ஊரடங்கு தளர்வினால் சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் கடைகள் திறக்கப்பட்டுள்ளது .ரிச்சி தெருவில் வாகனம் நிறுத்துமிடம் ஏதுமில்லாததால் , அண்ணா சாலை போன்ற இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது .

இதற்கு மாற்று ஏற்பாடாக காவல்துறை உதவியுடன் அருகிலுள்ள காசினோ திரையரங்கம் வாகனம் நிறுத்திமிடமாக மாற்றப்பட்டுள்ளது .

இரு சக்கர வாகனம் ஒரு மணி நேரம் நிறுத்த பத்து ரூபாயும் , எட்டு மணி நேரத்திற்கு இருபது ருபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது

50 ஆண்டுகளாக வரலாற்றில் முதல் முறையாக சென்னை காசினோ திரையரங்கம் வெளி வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளது.