சாதி, வருமான சான்றிதழ்கள் இனி ‘யுமாங் செயலி’யிலும் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:

மொபைல் மூலம்  நாம் இருக்கும் இடத்தில் இருந்தே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ்கள் போன்ற அரசு வழி  இணையசேவையை பெறும் வகையில் மத்திய அரசு ஏற்கனவே கடந்த ஆண்டு யுமாங் எனப்படும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி இருந்தது.

இந்த செயலியில் தற்போது தமிழகமும் இணைந்துள்ளது.  தமிழகத்தை சேர்ந்தவர்கள் தங்க ளுக்கு தேவையான சான்றிதழ்களை இந்த யுமாங் மொபைல் செயலி மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும், தேசிய மின் ஆளுமை திட்டத்தின் மூலம் புதிய செல்போன் செயலி தேசிய அளவில் உருவாக்கப் பட்டு உள்ளது.

மத்திய அரசு துறைகள் முதல் உள்ளாட்சி துறைகள் வரை நாடு முழுவதும் மின் ஆளுமை மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகளை ஒரே தரவுதளத்தின் கீழ் இந்த செயலி வழங்கும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மூலம் மின்மாவட்ட திட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

https://web.umang.gov.in/web/#/

முதல் கட்டமாக, வருவாய் துறையை சேர்ந்த 3 சேவைகளான சாதி சான்றிதழ், வருமான சான்றி தழ் மற்றும் பிறப்பிட, இருப்பிட சான்றிதழ் ஆகியவை ( UM-A-NG ) செயலியில் ஒருங்கிணைக்கப் பட்டு உள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, 24 மணி நேரம் வீட்டில் இருந்தபடியே சான்றிதழ்களை பெற முடியும். பொதுமக்களுக்கான அரசு துறைகளின் 63 சேவைகள் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுசேவை மையங்கள் மற்றும் இ-சேவை மையங்கள் வழியாக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில், சேவைகளை இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் எளிதில் விண்ணப்பித்து பெற முடியும்.

ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் www.tnsev-ai.tn.gov.in/cit-iz-en என்ற திறந்தநிலை சேவைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.  முதல்கட்டமாக வருவாய் துறையின் 20 சான்றிதழ் சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த பொதுமக்களுக்கான திறந்தநிலை சேவை தளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.