இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம்… சாதி மோதல்களில்!

டில்லி:

மிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரித்திருப்பதாகவும், கடந்த ஆண்டு நடந்த சாதி மோதல்களில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தை தமிழகம் பெற்றிருப்பதாகவும் தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

 இது குறித்து ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த ( 2015) ஆண்டில் தமிழகத்தில் 426 சாதி மோதல்கள் நிகழ்ந்துள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட இரு மடங்கு ஆகும்.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சாதி மோதல்களில், உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

a

உத்திரபிரதேசத்தில்  724 சாதி மோதல்களல் 808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில்   426 மோதல்களில் 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் சாதி மோதல்கள் அதிகம் நடந்த பீஹாரை, தமிழகம் முந்திவிட்டது. அந்த மாநிலத்தில்  258 மோதல்களில் 403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 426 சாதி மோதல்களில், தாழ்த்தப்பட்ட பிரிவினர்களுக்கு எதிராக 186 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதே போல அகில இந்திய அளவில் மாணவர்களுக்கிடையேயான மோதல்கள் அதிகரித்துள்ளன. 2015-ஆம் ஆண்டில் 3600 மோதல்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட இரு மடங்கு ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.