இந்தியளவில், தமிழ்நாடு சிறந்த மருத்துவக் கட்டமைப்பையும், மருத்துவ அர்ப்பணிப்பையும் கொண்டுள்ளதற்கு, இங்கு கல்வியில் பின்பற்றப்படும் சமூக நீதி இடஒதுக்கீடே காரணம் என்பதை இந்த கொரோனா சூழல் நிரூபித்துள்ளது.

கட்டுரையாளரும் மருத்துவருமான சக்திராஜன் கூறுவதைப் பார்ப்போம்; கொரோனா பரவல் நாட்டின் அடிப்படை இயக்கத்தையே புரட்டிப் போட்டுள்ள இந்த நிலையில், தமிழகத்தின் பொது சுகாதாரத் துறையின் செயல்பாடு ஆச்சர்யத்துடன் கவனிக்கும் ஒரு அம்சமாக மாறியுள்ளது.

கொரோனா சிகிச்சையின் பொருட்டு, தனியார் மருத்துவமனைகள் வழக்கம்போல் கொள்ளையடித்துக் கொண்டிருக்க அல்லது அந்த நோயாளிகளை தவிர்க்க முயற்சிக்க, தமிழகத்தின் பொது சுகாதாரத் துறையோ எதைப் பற்றியும் கவலைப்படாமல், மக்களுக்காக பம்பரமாய் சுழன்று கொண்டுள்ளது.

மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்களை எடுத்துக்கொண்டால், அங்கு அரசு மருத்துவக் கட்டமைப்பு தமிழகத்தைவிட மிகவும் பின்தங்கியிருக்கும் ஒரு சூழலில், தனியார் மருத்துவர்களை அரசு தரப்பில் மிரட்டல் விடுத்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டியுள்ளது.

அதேசமயம், பொது மருத்துவக் கட்டமைப்பிற்கு, தங்களின் பங்களிப்பைப் பற்றி எந்தக் கவலையுமில்லாமல், தனியார் மருத்துவர்கள், அரசின் சலுகையை அனுபவித்தவர்கள், பணக்காரர்களுக்கு சேவை செய்துகொண்டுள்ளார்கள். இவர்கள்தான் மெரிட் எனும் வகைப்பாட்டிற்குள் வருபவர்கள்.

ஆனால், சமூக நீதி இடஒதுக்கீடு அமலில் இருக்கும் தமிழ்நாட்டில் நிலைமையே வேறாக உள்ளது. தமிழ்நாட்டு பொது சுகாதார அமைப்பில் மொத்தம் 18000 மருத்துவர்கள் இருக்கிறார்கள் (அவர்களில் 12000 பேர் கிராமப்புறங்களில் பணிபுரிபவர்கள்). மேலும், லட்சக்கணக்கான செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார் பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், இதுவரை ஒருவரிடமிருந்துகூட ராஜினாமா கடிதம் பெறப்படவில்லை தமிழக சுகாதாரத் துறை.

மேலும், இந்திய அளவில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளில், இறப்பு விகிதம் மிகவும் குறைவாய் இருப்பதும் தமிழ்நாடுதான். சமூகநீதி இடஒதுக்கீட்டால் மருத்துவம் படித்தவர்களின் திறமைக்கும் இதுவும் ஒரு சான்று!

கொரோனாவால் சில மருத்துவர்களும், செவிலியர்களும் இறந்தாலும், பலர் பாதிக்கப்பட்டாலும், பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றினாலும், தமிழகத்தில் சமூக நீதி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் இடம்பெற்றவர்கள், தொடர்ந்து ஓய்வறியாது பணியாற்றி வருகிறார்கள் பொது சமூகத்திற்காக.

இதை அவர்கள் பணத்திற்காக அல்லாமல், தங்களுக்கான ஒரு சமூக கடமையாக செய்து வருகிறார்கள். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகங்களிலிருந்து வந்த முதல் தலைமுறை மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த இதரப் பணியாளர்கள் இந்த உணர்வை இயல்பாய் கொண்டுள்ளனர்.

இந்த சமூக அர்ப்பணிப்பு உணர்வு ஏதோ ஒருநாளில் உருவாக்கப்பட்டதல்ல. பல பத்தாண்டுகளாக, சமூக நீதி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் பணியாற்றும் 12000 மருத்துவர்களில் பெரும்பாலானோர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ‘மெரிட்(!)’ அடிப்படையிலான மேல்சாதியினர் மிகவும் குறைவே!

தமிழகத்தில் அர்ப்பணிப்புடன் தங்களைப் பற்றியும்கூட கவலைப்படாமல் பணியாற்றிவரும் மருத்துவர்கள் யாரும் நீட் எழுதி தங்கள் தகுதியை நிரூபித்தவர்கள் அல்லர். ஆனால், மெரிட் பேசும் மருத்துவர்கள், இந்த இக்கட்டான சூழலில் சமூகத்தை உதறித் தள்ளிவிட்டு, பணக்காரர்களுக்கு சேவையாற்றிக் கொண்டுள்ளனர்.

தற்போது, இந்த கட்டமைப்பிற்குத்தான் நீட் என்ற வடிவத்தில், மெரிட் என்ற பெயரில் பெரிய தீமை நிகழ்ந்துள்ளது. தற்போது இந்திய மருத்துவக் கவுன்சில், மருத்துவக் கல்வியில் மற்றொரு தேவயைற்ற மற்றும் சமூக நீதிக்கு எதிரான ஒரு திருத்தத்தை செய்துள்ளது. அதாவது, அதன் அதிகாரத்தை மீறிய ஒரு திருத்தம் அது.

இந்த திருத்தத்தின் மூலம், முதுநிலைப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு இனிமேல் கிடையாது. அவர்களுக்கு டிப்ளமோ படிப்புகளில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற திருத்தம். இதனால், சமூகத்திற்கு தேவையான சேவைகளை செய்துவரும் அரசு மருத்துவர்கள், தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்வது தடைபடுகிறது. அதாவது, இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த திருத்தம் காரணமாக, சுமார் 2500 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மருத்துவ இளநிலைப் பட்டதாரிகளின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன.

தமிழகத்தின் சிறந்த மருத்துவக் கட்டமைப்பு சிதைக்கும் அனைத்து வேலைகளும் ஒருபக்கம் நடந்துகொண்டுள்ளன. எனவே, இந்தக் கட்டமைப்பை காக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வது அவசியம். இல்லையெனில், கொடுக்க வ‍ேண்டிய விலை மிகவும் அதிகமாக இருக்கும்.

 

நன்றி: த வயர்