சாதி வெறி. சிறுமி கொடூர கொலை: எவிடன்ஸ் கதிர் குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் சிறுமி கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டதற்கு சாத வெறியே அடிப்படைக் காரணம் என்று சமூகசெயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாய்பட்டியை அடுத்த சுந்தரபுரத்தில் வசிக்கும் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சாமிமுத்து, சின்னப்பொண்ணு தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இவர்களில் கடைசி மகள் ராஜலட்சுமிக்கு வயது 13.

ராஜலட்சுமி தலைவாய்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது வீட்டுக்கு அருகில் மாற்று சமூகத்தை சேர்ந்த

என்கிற தினேஷ்குமார் (வயது 27 ) வசக்கிறார். இவரது  சாரதா.  இவர்களுக்கு 4 வயதில் ஆண்குழந்தை இருக்கிறது.

ராஜலட்சுமி

இந்த நிலையில், தன் வீட்டுக்கு விளையாட வந்த சிறுமி ராஜலட்சுமியடம்  கார்த்திக் தவறாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறார். சிறுமி பயந்து அலறவே, மது போதையில் இருந்த கார்த்திக், அரிவாளால் சிறுமியின் தலையைக் கொடூரமாக வெட்டக்கொன்றார்.

தினேஷ்குமார் என்கிற கார்த்திக்

இந்த நிலையில், கொலையைக் கண்ட கார்த்திக்கின் மனைவியும், தம்பியும் கார்த்திக்கைப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தார்கள் என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற சமூகசெயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர், நம்மிடம் பேசினார். அவர், “இந்த கொடூர சம்பவம் குறித்து விசாரித்தேன். தற்போதும் சம்பவ இடத்தல்தான் இருக்கிறேன்.

எவிடன்ஸ் கதிர்

கொலை செய்த கார்த்திக்கின் மனைவியும் தம்பியும் பிடித்து அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர் என்று வெளியான தகவல் தவறு. கொலை செய்துவிட்டு தப்பியோடிய கார்த்தியை பொதுமக்கள்தான் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இந்தக் கொலையில் சாதிவெறி முக்கிய பங்கு வகித்திருக்கிறது.  கொலையுண்ட ராஜலட்சுமி குடும்பத்தினரை கார்த்திக் குடும்பத்தினர் சாதிப் பெயரைச் சொல்லி சாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது.

இன்னொரு புறம் சிறுமி ராஜலட்சுமியை நீண்ட நாட்களாகவே கார்த்திக்  பாலியல் ரீதியாக சீண்டி வந்திருக்கிறார்.  அதோடு,  இது குறித்து குடும்பத்தினரிடம் கூறினால் குடும்பத்தையே  கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.  சம்பவத்தன்றும் ராஜலட்சுமியை கார்த்திக் சீண்டியிருக்கிறார். பொறுக்கமுடியாத சிறுமி ராஜலட்சுமி தன் அப்பாவிடம் கூறப்போவதாக சொல்லவே ஆத்திரத்தில்  அரிவாளால் கழுத்தை அறுத்து கார்த்தி கொலை செய்திருக்கிறார்.

சிறுமியின் கழுத்தை அறுத்து, தலையை மட்டும் சாலைக்கு எடுத்து வந்த கார்த்திக்,. அப்போதும் சாதி வெறியுடன் பேசியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காமவெறியும் மது வெறயும் மட்டுமல்ல..  அடிநாதமாக சாதி வெறி இருக்கிறது. தற்போதும்கூட சாதி காரணமாக, குற்றவாளிக்கு சாதகமாக  காவல்துறை நடந்துகொள்கிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு உரிய தண்டனை  பெற்றுத்தரவேண்டும்” என்றார்.