ஆந்திர ஆணவக் கொலை : பலியானவர் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மிரியாலகுடா, தெலுங்கானா

ணவக் கொலை செய்யப்பட்ட ஆந்திர வாலிபரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள்ளது.

பிரணய் – அம்ருதா (பழைய படம்)

ஆந்திர மாநிலத்தில் தலித் வகுப்பை சேர்ந்த 24 வயது இளைஞர் பிரணய் பெருமல்லா தெலுங்கானா மாநிலம் மிரியாலகுடாவில் வசித்து வந்தார். இவர் உயர்சாதியை சேர்ந்த மாருதி ராவ் என்பவரின் மகளான அம்ருதாவை இவர் காதல் மணம் புரிந்தார். இதற்கு அம்ருதாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பலமுறை அவர் அம்ருதாவை தொலைபேசி மூலம் மிரட்டி உள்ளார்.

இந்நிலையில் அம்ருதா கர்ப்பம் தரித்தார். அதற்கு மகிழ்ச்சி அடைய வேண்டிய மாருதி ராவ் மாறாக அந்த குழந்தையை கருக்கலைப்பு செய்ய தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு அம்ருதா ஒப்புக் கொள்ளாததால் ஆத்திரம் அடைந்த மாருதி ராவ் பட்டப்பகலில் பிரணய் பெருமல்லாவை ஆட்கள் மூலம் கொலை செய்துள்ளார்.

இந்த செய்தி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் மாருதி ராவ் தனது மகளை விட்டு நீங்குவதற்கு பிரணய் இடம் ரூ. 1 கோடி பேரம் பேசியதும் அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்பதும் தெரிய வந்தது. தற்போது மாருதி ராவ் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது அம்ருதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தகவல் அளித்த பிரணய் யின் தந்தை பாலசாமி, “எனது மகன் உயிருடன் இருந்து இந்த குழந்தையை காணாதது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவர் உயிருடன் இருந்தால் இந்த குழந்தையைக் கண்டு மகிழ்ந்திருப்பார். இருவரும் அமைதியாகவும் வாழ்ந்திருப்பார்கள்” என கண்ணீருடன் தெரிவித்தார்.

அம்ருதாவின் பாதுகாப்புக்காக அவர் இருப்பிடம் தற்போது வெளியில் தெரிவிக்கப்படாமல் உள்ளது.