சென்னை:

பாலமேடு போட்டி சுமூகமாக நடைபெறும் வகையில் தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழர்களின் பாரம்பரியம் மற்றும்  வீரம் மிக்க விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு தடங்கல்களை கடந்து, பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.  ஆனால், தற்போது இந்த போட்டிகளிலும் ஜாதிய அரசியல் புகுந்துள்ளது. இது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு பெயர் பெற்ற ஊர்களில் பாலமேடும் ஒன்றாகும். இங்கு பொங்கலுக்கு அடுத்த நாள் வெகு விமரிசையாக ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், பாலமேடு அம்பேத்கர் உறவின்முறை தலைவர் சந்தானம் என்பவர் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில், ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் தங்களது ஜாதி புறக்கணிக்கப்பட்ட இருப்பதாகவும், எங்களிடம் நன்கொடை பெறும் நிலையில், எங்களது சமூகத்தினரையும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி,  டி.ரவீந்திரன் ஆகியோர் ம, னு குறித்து கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளிவைத்தனர். மேலும், பாலமேடு ஜல்லிக்கட்டு சுமுகமாக நடைபெறுவதை கலெக்டர் உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டார்.

ஜல்லிக்கட்டுப் போட்டியிடும் ஜாதிய ரீதியிலான உரிமை கேட்டு போர்க்கொடி தூக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் போட்டியிலும் ஜாதிகள் நுழைந்துள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.