1
வாஷிங்டன்:
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மறைவை அமெரிக்கர்கள் சிலர் ஆடிப்பாடி கொண்டாடினர்.
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை இரவு மறைந்தார்.   கியூபா மக்களின் நம்பிக்கைக்கும், பாசத்துக்கும் உரியவராக திகழ்ந்தார். தவிர அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று தன் நாட்டு மக்களை காப்பாற்றியவர் என்று உலகம் முழுதும் போற்றப்படுகிறார்.
03
 
இவரது மறைவுக்கு கம்யூனிச ஆட்சியில்லாத நாடுகளின் தலைவர்களும் மக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில்,  காஸ்ட்ரோவின் மறைவை அமெரிக்காவின் மியாமி நகரத்தில் வசிக்கும் பலர் ஆடிப்பாடி கொண்டாடினர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள், கியூபாவில் இருந்து வெளியேறி வந்தவர்கள். காஸ்ட்ரோவை கடுமையாக விமர்சிப்பவர்கள்.
“காஸ்ட்ரோ, ஒரு கொடூர சர்வாதிகாரி” என அமெரிக்க அதிபர் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.