‘கொலைகாரன்’. படத்தின் கொலைகாரனின் பெயரை கண்டுபிடித்தால் பரிசு…!

தியா மூவிஸ் சார்பாக பிரதீப் தயாரிப்பில் , ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் , அர்ஜூன் – விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் படம் ‘கொலைகாரன்’.

இப்படக்குழு தற்போது போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. ஏப்ரல் 19 முதல் 24 ஆம் தேதி வரை வெளியாகும் போஸ்டர்களில் துப்புகள் (Clues) கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை ஒருங்கிணைத்து , கொலைகாரன் கதாப்பாத்திரத்தின் பெயரை கண்டுபிடிக்கும் 4 பேருக்கு ஃபாஸ்ட்டிராக் வாட்ச் பரிசாக வழங்கப்படும் என்றும் கொலைகாரன் திரைப்படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியுடன் பிரீமியர் காட்சிக்கான 100 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிலை ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் kgcontest2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பரிசு பெறுபவர்களின் விவரம் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிவிக்கப்படும்.