பிளாஸ்டிக்கை உண்ணும் கம்பளிப்பூச்சிகள்…..!

“பிளாஸ்டிகோஸ்” என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. தமிழில் நெகிழி என்றும் அழைக்கலாம்

விலை குறைவாக அதே சமயம் எளிதான பயன்பாட்டிற்கு இந்த நெகிழிகள் உருவாக்கப்பட்டாலும் இவை மக்குவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்வதே சிக்கலாகிகிறது. எனவேதான் சமீபத்தில் தமிழக அரசும் நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதித்தது

ஆனாலும் இந்த நெகிழிகளை மக்கச் செய்ய பலவகையான பாக்டீரியாக்களின் வழியாக முயற்சி செய்தாலும் இன்னமும் ஆய்வுகள் வெற்றியடையவில்லை

ஸ்பெயினிலுள்ள கான்ட்ட்ரியா பல்கலைக்கழகத்தில் ஒரு உயிரியல் அறிஞர் அதோடு  தேனீ வளர்ப்பவராகவும் இருந்த ஃபெடரிகா பெக்டோசினி, தனது சில தேன்கூட்டைகளில் மெழுகு மூலம், தேனைத் தேக்கும் போது, கம்பளிப்பூச்சிகள் அதில் இருந்ததை கவனித்தார்.  அதே சமயம் அவற்றில் அந்த கம்பளிப்பூச்சியின் துளையும் இருந்ததை கவனித்த  அவர் அதை உறுதி செய்ய அவள் ஒரு பிளாஸ்டிக்(நெகிழி) ஷாப்பிங் பையில் வைத்துவிட்டு சில மணி நேரம் கழித்து பார்த்தபோது அந்த பிளாஸ்டிக்கில் (நெகிழி)  சிறு சிறு துளைகளையும் அதிலிருந்த அந்த கம்பளிப்பூச்சி அவரின் வீட்டில் வலம் வந்தது கண்டு அதிசயித்தார்.

இதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்  பெடரிகா

நல்ல விசயம்தானே

-செல்வமுரளி