மிஸ் யுனிவர்ஸ் ஆன பிலிப்பைன்ஸ் நாட்டு அழகி கேட்ரியானோ கிரே

முவாந்தாங், தாய்லாந்து

தாய்லாந்து நாட்டில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் என்னும் பிரபஞ்ச அழகி போட்டியில் கேட்ரியானோ கிரே என்னும்  பிலிப்பன்ஸ் நாட்டு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த வருடத்துக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி தாய்லாந்து நாட்டில் உள்ள முவாந்தாங்  நகரில் நடந்தது.   ஏற்கனவே தாய்லாந்து நாட்டில் 1992 மற்றும் 2015 ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகிப் போட்டி நடந்துள்ளது.   தற்போது 13 வருடங்கள் கழித்து மீண்டும் நடந்துள்ளது.   இந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் உலகெங்கும் உள்ள பல நாட்டு அழகிகள் கலந்துக் கொண்டனர்.

இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துக் கொண்ட மும்பையை சேர்ந்த நேகல் சுதாசமா அரை இறுதி சுற்றுவரை கூட வராமல் வெளியேறினார்.     அரை இறுதிப் போட்டியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களாக ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கோஸ்டா ரிகா, குராகோ, இங்கிலாந்து, ஹங்கேரி, இந்தோனேசியா, அயர்லாந்து, ஜமைக்கா, நேபாளம், பில்ப்பைன்ஸ், போலந்து, பியூரிட்டோ ரிகோ, தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா, வெணிசுலா, வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துக் கொண்டனர்.

இவர்களில் வியட்நாம், பியூரிட்டோ ரிகோ, பிலிப்பைன்ஸ், வெணிசுலா,தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தகுதி பெற்றனர்    அவர்களுக்கிடையே கடும் போட்டி இருந்தது.  இறுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கேட்ரியானோ கிரே பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில்  2-வது இடத்தைத் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டமாரின் கிரீன் பெற்றார், 3-வது இடத்தை வெணிசுலாவின் ஸ்டெபானி கட்டர்ஸ் பெற்றார்.  அதன் பிறகு 4-வது இடத்தை பியூரிட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த கியாரா ஓர்டேகாவும், 5-வது இடத்தை வியட்நாமின் ஹென் நிஹமும் பெற்றுள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி