கிருஷ்ணகிரி :
ரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன் 80 கிலோ எடை கொண்ட முட்டைகோஸ் மூட்டை ரூ.500 வரையில் விற்று வந்த நிலையில், தற்போது ரூ.160-க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை.
கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடக எல்லையை ஒட்டிய குளிர்ச்சியான பகுதிகளான, கெலமங்கலம், மல்லேபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் முட்டைகோஸ் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளனர்.

படங்கள் நன்றி : தந்தி

கெலமங்கலம் பகுதியில் தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை அறுவடை செய்து உள்ளூர் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதுடன் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை வெளிஇடங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து வசதி இல்லாமல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
முட்டைகோசை செடிகளில் பறிக்க ஆகும் கூலி செலவு, போக்குவரத்து செலவு, சந்தைக்கு கொண்டு செல்லும் செலவுகளை பார்த்தால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என கூறும் விவசாயிகள் அவற்றை பறிக்காமல் பலர் தோட்டங்களிலேயே விட்டு வருகின்றனர். மேலும் பலர் கால்நடைகளை மேயவிட்டு வருகின்றனர்.
விலை வீழ்ச்சியால் மிகுந்த மனவேதனை அடைந்திருக்கும் இந்த பகுதி விவசாயிகள் அரசு தங்களுக்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.