நகைக்கடை உரிமையாளரை காரில் கடத்தும் கும்பல் – சிசிடிவி காட்சி

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 65வயதுடைய நகைக்கடை உரிமையாளரை ஒரு கும்பல் கடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

oldman

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ சாலையில் இருசக்கர வாகனத்தில் நகைக்கடை உரிமையாளரான கிஷோரிலால் சோனி(65) வந்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு கும்பல் அவரை தடுத்து நிறுத்தி காரில் கடத்தியது. கிஷோரிலால் கடத்தப்பட்ட நிகழ்வு அங்குள்ள சிசிடிவி காமராவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கிஷோரிலால் செப்டம்பர் 8ம் தேதி கடத்தப்பட்ட நிலையில், 29ம் தேதி நேபாளில் மீட்கப்பட்டார். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு நகைக்கடை உரிமையாளரை கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.