மூணாறு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு: கொட்டும் மழையில் தொடரும் மீட்பு பணி

இடுக்கி: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. ஆகையால் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக  ராஜமலை பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்நிலையில் நிலச்சரிவில் காணாமல் போன 40க்கும் அதிகமானவர்களை தேடும் பணி கொட்டும் மழையில் 5வது நாளாக இன்றும் தொடர்ந்தது. நேற்று வரை 49 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இன்றும் தொடர்ந்த மீட்பு பணிகளில் மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இடைவிடாத மழைக்கு இடையேயும் மீட்பு படையினர் தொடர்ந்து காணாமல் போனவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.