காவிரி விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூடியது

சென்னை:

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க திமுக செயற்குழு இன்று கூடுகிறது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில், அண்ணால அறிவாலயத்தில் இன்று  காலை 10 மணிக்கு திமுக செயற்குழு கூடியது.

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில், தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இன்று திமுக செயற்குழுக் கூட்டம்  நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, நேற்று  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமது கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் அவசர ஆலோசனை நடத்தி உள்ள நிலையில் தற்போது  செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.