காவிரி விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

--

டில்லி,

காவிரி பிரச்சினை குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், தமிழக தேவைக்க்காக  63 டிஎம்சி நீரை காவிரியில்  திறந்துவிடக் கோரி தமிழகம் மனுத்தாக்கல் செய்தது.

அந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.

காவிரியில் இருந்து இந்த ஆண்டு கர்நாடகம் தர வேண்டிய 63 டிஎம்சி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி தமிழக அரசு சார்பில் ஒரு கோரிக்கை மனு உச்சநீதிமன்றத்தில்  வைக்கப்பட்டது.

ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும்,  காவிரி விவகாரத்தில் இதுபோன்ற எந்த மனுவையும் புதிதாக தாக்கல் செய்ய அனுமதிக்க மாட்டோம் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

காவிரி விவகாரத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்றும், அதன் காரணமாக  புதிய மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க மாட்டோம் என நீதிபதிகள் கூறி உள்ளனர்.

இதன் காரணமாக தீர்ப்பு வரும்வரை தமிழகம் காவிரி பிரச்சினையில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

You may have missed