தஞ்சாவூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில், தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக  தையற் கலைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உச்சநீதி மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, தஞ்சை, திருச்சி போன்ற டெல்டா மாவட்டத்தை சேர்ந்த தையற் கலைஞர்கள்  இன்று  ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பனகல் கட்டிடம் முன்பு சுமார்  300 க்கும் மேற்பட்ட தையற்க் கலைஞர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறினால் தொடர்ந்து போராட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.