காவிரி வழக்கு: கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்தியஅரசு! தமிழகஅரசு பகிரங்க குற்றச்சாட்டு

டில்லி,

காவிரி வழக்கு குறித்த இறுதிக்கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும்,  அதிகாரங்கள் இருந்தும் அதை பயன்படுத்த மத்திய அரசு தவிறிவிட்டது என்றும் தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை கடந்த மாதம் 11–ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காவிரி வழக்கில் இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று 5வது நாளாக தமிழக அரசு தனது தரப்பு  வாதத்தை முன்வைத்து வாதிடுகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற  விசாரணையின்போது, மத்திய அரசுக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய அமர்வு, இவை அனைத்திற்கும் சட்ட ரீதியிலான விளக்கம் தேவை என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

கடந்த நான்கு  நாட்களாக தமிழகம் தனது தரப்பு வாதத்தை முன்வைத்து வாதிட்டு வருகிறது. தமிழக அரசின் இன்றைய வாதத்தில், காவிரி விவகாரத்தில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு நடக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், தங்களிடம் வானளாவிய அதிகாரங்கள் இருந்தும் அதனை பயன்படுத்த மத்திய அரசு தவறி விட்டது என்றும்,  காவிரியின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் போது கர்நாடக அரசு தமிழக அரசிடம் கேட்கவில்லை.

இவ்வாறு மத்திய அரசுமீது நேரடியாக குற்றம் சாட்டி உள்ளது தமிழகம்.