டில்லி:

டந்த 3ந்தேதி காவிரி விசாரணையின்போது, தமிழக்ததற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் கர்நாடகா வுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சினையில் கடந்த 3ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்பின்படி‘ வரைவுத் திட்டத்தை 6ந்தேதி விசாரணையின்போது தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் காவிரி நதி நீர் பங்கீடு குறித்து இதுவரை  மேற்கொண்ட பணிகளை அறிக்கையாக தாக்கல் செய்ய  மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் திறந்து விட கர்நாடகவிற்கு  சுப்ரீம் கோர்ட் உத்தரவு  பிறப்பித்து உள்ளது. மேலும்  கர்நாடகா உத்தரவை மீறினால்  கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்  என சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை விடுத்து  இருந்தது. அப்போதே கர்நாடகா  சார்பில் 4 டிஎம் சி நீர் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டது. காவிரி நீர் தரமுடியுமா? முடியாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 8ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  சுப்ரீம்  கோர்ட்டில் கர்நாடக மாநிலம் சார்பில்  அறிக்கை தாக்கல் செய்யபட்டது அதில் போதிய மழை இல்லாததால் தமிழகத்திற்கு காவிரி யில் தண்ணீர் திறக்க இயலாத  நிலையில் இருப்பதாகவும்,  இந்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை தமிழகத்திற்கு 116.7 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்றும்,  காவிரியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக 16.66 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடபட்டு உள்ளது என்றும் கூறி உள்ளது.

தற்போதைய நிலையில், கர்நாடக மாநிலத்தின் தேவைக்கு மட்டுமே காவிரியில் தண்ணீர் இருக்கிறதுஎன்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து நாளை விசாரணை நடைபெற உள்ளது.