டில்லி:

காவிரி வரைவு திட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசு சாரபில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதை நிராகரித்த உச்சநீதி மன்றம் வழக்கின் இறுதி விசாரணை நாளை நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளது.

கடந்த 12ந்தேதி விசாரணையின்போது, மத்திய அரசு தாக்கல் செய்த காவிரி வரைவு திட்டம் குறித்து இன்று (14ந்தேதி) பதில் தெரிவிக்க உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில், 3 முக்கிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. அதன்படி,  மத்திய அரசு உருவாக்கும் அமைப்பிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிட வேண்டும் என்றும், அந்த  அமைப்பின் தலைமையிடத்தை பெங்களூரில் இருந்து டில்லி மாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தது. மேலும், இதுகுறித்து  உடனடியாக அரசிதழில் வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்தது.

ஆனால் இந்த கோரிக்கைகளை உச்சநீதி மன்றம் நிராகரித்ததாக கூறப்படுகிறது.  அதேவேளையில், காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயரிட மத்திய அரசு ஒப்புதல அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் தற்போது நிலையான அரசு இல்லாததால் வழக்கை ஜூலைக்கு ஒத்திவைக்க கர்நாடகா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.  ஆனால், அந்த கோரிக்கை நிராகரித்த உச்சநீதி மன்றம் விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளது.

இந்நிலையில் திருத்தப்பட்ட காவிரி வரைவு செயல்திட்டத்தை நாளை சமர்பிக்க மத்திய அரசுக்கு  உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.