காவிரி விவகாரம்: மத்தியஅரசின் இடைக்கால மனுவை விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

டில்லி:

காவிரி விவகாரம் தொடர்பாக மேலும் 2 வார கால அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற வழக்கில், நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை நடை முறைப்படுத்தும் செயல் திட்டத்தை (ஸ்கீம்) உருவாக்கி, அதை மே 3ந்தேதி (நாளை) உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கெடு விதித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பான விசாரணை நாளை நடைபெற உள்ள நிலையில்,  காவிரி விவகாரத்தில் கூடுதல் அவகாசம் கேட்டு மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இடைக்கால மனுவை உடனடியாக விசாரிக்க மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால்,  உச்ச நீதிமன்றம் உடனேடியாக விசாரிக்க மறுப்பு தெரிவித்து உள்ளது. நாளை விசாரணையின்போது சேர்த்து விசாரிக்கப்படும் என்று கூறி உள்ளது.