டில்லி:

காவிரி நதிநீர் பிரச்சினை காரணமாக இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற மாநில அரசுகளின் வாதத்தை தொடர்ந்து, மாநிலங்கள் சார்பாக தொழில்நுட்ப வல்லுநர்களை ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து தமிழகம் சார்பாக காவிரி தொழில்நுட்ப வல்லுனராக சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நடந்துவருகிறது. இந்த மனுக்களை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

காவிரி வழக்கில் தொழில்நுட்ப ரிதியான வாதங்களை முன்வைத்து வாதாடுவதற்காக காவிரி தொழில்நுட்ப குழு தலைவராக சுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும், அவர் காவிரி வழக்கில் உள்ள தொழில்நுட்ப ரீதயான  வாதங்களை முன்வைப்பார் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.