காவிரி வழக்கு: உச்சநீதிமன்ற வளாக மரத்தில் ஏறி தமிழக விவசாயி போராட்டம்!!

டில்லி:

காவிரி வழக்கில் மத்திய அரசு கால அவகாசம் கோரியை ஏற்று, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு  உச்சநீதி மன்றம்  தள்ளி வைத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதி மன்ற வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி தமிழக விவசாயி ஒருவர் போராட்டம் நடத்தினார்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.இன்றைய விசாரணையின்போதும் மத்திய அரசு சார்பில் அவகாசம் கோரப்பட்டது.

இது தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கு விசாரணையை அறிய உச்சநீதி மன்ற வளாகத்தில்  குழுமியிருந்த தமிழக விவசாயிகளும் மத்திய அரசின் வாதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக அதிருப்தி அடைந்த தட்சிணாமூர்த்தி என்ற விவசாயி, விறுவிறுவென  அங்கிருந்த மரத்தில் ஏறி தனது எதிர்ப்பை தெரிவித்தார். அவரை மரத்தில் இறங்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.