சென்னை:

காவிரி வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழக அரசு, மத்திய அரசு மீது  தொடர்ந்த அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  தீபக் மிஸ்ரா தலைமயிலான உச்சநீதி மன்ற நீதிபதிகள்  அமர்வில் விசாரணை நடைபெற்றது.

வழக்கை விசாரித்த அமர்வு, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை அடுத்த மாதம் 3ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி  6வாரக்காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், கெடு கடந்த மாதம் 29ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில்,  மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்காததால்,  மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளது.

மத்திய அரசு சார்பில் ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மனுவும் இன்று விசாரிக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்திருந்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தொடங்கியது. அப்போது நீதிபதிகள், மத்திய அரசு உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தாது வருத்தமளிக்கிறது என்றும்,  இறுதி நேரத்தில் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதி மன்றம் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியது.

மேலும், மத்திய அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, எல்லாவற்றையும் கண்காணித்துக்கொண்டிருக்க முடியாது என்ற நீதிபதிகள், .  உச்சநீதி மன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு, கர்நாடக  தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் கூறியது.

நடுவர் மன்ற தீர்ப்பில் இடம்பெற்றுள்ள அம்சங்களையும் இணைத்தே தீர்ப்பு  வழங்கப்பட்டது என்று கூறிய நீதிபதிகள்,  மே3ந்தேதிக்குள், காவிரி விவகாரம் குறித்து  வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அது மத்திய அரசின் கடமை என்றும் கூறி உள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம், கர்நாடகாவில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், காவிரி நதி நீர் தொடர்பான வழக்குகள் மே 3ந்தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் கூறினர்.