பெங்களூரு:
காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து போராட்டத்தைத் துவங்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, தனது உண்ணாவிரத்ததை ஒரே நாளில் திரும்பப்பெற்றுக்கொண்டார்.
deve
கர்நாடக அரசு, தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் பங்கீட்டை அளிக்க மறுத்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இது குறித்து தொடர்ந்து உத்தரவுகளை வழங்கிவரும் உச்ச நீதிமன்றம், சமீபத்தில், தமிழகத்துக்கு மீண்டும் 6 நாட்கள் விநாடிக்கு 6000கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விதானசவுதாவில் உள்ள காந்திசிலை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம்  இருக்கப்போவதாக அறிவித்து போராட்டத்தைத் துவக்கினார்.
அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
பிரதமர் மோடியின் சார்பில் மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், மற்றும் சதானந்தாகவுடா, தேவேகவுடா வீட்டில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று  தெரிவித்தனர்.
இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கூறியதையடுத்து தேவகவுடா நேற்று இரவு உண்ணாவிரதத்தை  கைவிட்டார்.