டில்லியில் இன்று மாலை கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்

--

டில்லி:

டில்லியில் இன்று மாலை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக  காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்  இன்று மாலை டில்லியில்  நடைபெற உள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழகம் உள்பட 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆணையம் தமிழகத்திற்கான தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு பலமுறை உத்தரவிட்டும், கர்நாடக அரசு அதை மதிக்காமல்,தண்ணீர் திறக்க து மறுப்பு தெரிவித்து வந்தது. தற்போது,  கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியதால், கடந்த 17ம் தேதி முதல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லி சேவா பவனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கூடுகிறது.

 

You may have missed