தமிழக ஆளுநருக்கு கொரோனா : காவிரி மருத்துவமனையில் மீண்டும் உறுதி

சென்னை

சென்னை காவிரி மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரிசையில் ஆளுநருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

ஆளுநர் மாளிகையில் பணி புரியும் ஊழியர்களுக்குக் கடந்த சில  நாட்களாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

இதையொட்டி ஆளுநர் தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டார்.

அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்து கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையொட்டி இன்று அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது அவருக்கு அறிகுறிகள் இல்லாமல் மிதமான அளவில் தொற்று உள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்தது.

இதையொட்டி அவரை வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்திய மருத்துவமனை நிர்வாகம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தது.

கார்ட்டூன் கேலரி