சென்னை:

காவிரி விவகாரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க நாளை மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின கூறி உள்ளார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசை  எதிர்த்து திமுக உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி கடந்த 15 நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை (16-ம் தேதி)  மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து முடிவு எடுக்க இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 6ந்தேதி நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுத்துள்ளபடி, எஸ்டி, எஸ்சி வன்கொடுமை சட்டத்திருத்தத்திற்கு  எதிராக நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.