தமிழகத்தில் காவிரி பிரச்சினை உச்சம்: திருப்பி அனுப்பப்பட்ட கர்நாடக பேருந்துகள்!

ஈரோடு:

காவிரி பிரச்சினையின் உச்சகட்டமாக, கர்நாடக பேருந்துகளை தமிழகத்திற்குள் வர விடாமல் திருப்பி அனுப்பப்பட்டன.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று தமிழகத்துக்கு எதிராகவும்,  கர்நாடகத்துக்கு ஆதரவாகவும் செயல்பட்டது.

முதலில் காவிரி ஆணையம் அமைக்க ஒத்துகொண்ட மத்திய அரசு, அடுத்த விசாரணையின்போது அந்தர் பல்டி அடித்தது தமிழகத்துக்கு மாபெரும் துரோகம் இழைத்தது.

karn-bus

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனால் கர்நாடக அரசு பேருந்துகள் தமிழகத்திற்குள் வந்தால் தாக்கப்படலாம் என எண்ணி,  கர்நாடக அரசு பேருந்துகள் தமிழக எல்லைக்குள் நுழைய விடாமல்  திருப்பி அனுப்பி அனுப்பப்பட்டது.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் கர்நாடகாவுக்கு செல்வது கடந்த மாதம் 9ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. அதே போல் கர்நாடகா பேருந்துகள் தமிழகம் வருவதும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் பதற்றம் தணிந்ததை அடுத்து,  ஒரு மாதத்திற்கு பிறகு, இன்று இரு மாநிலங்கள் இடையே இன்று வாகன போக்குவரத்து ஆரம்பமானது.

கர்நாடகாவிற்குள், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் செல்ல தொடங்கியுள்ளன. ஒசூர் எல்லையிலிருந்து பெங்களூருவுக்கு வாகனங்கள் செல்ல ஆரம்பித்திருக்கின்றன.

ஆனால் சத்தியமங்கலம் அருகே கர்நாடக பேருந்துகளை தமிழக போலீசார் தடுத்து திருப்பிய சம்பவம் நடந்துள்ளது.

இன்று புளுஞ்சூரிலிருந்து தமிழக பகுதியான சத்தியமங்கலம் நோக்கி நான்கு கர்நாடக பேருந்துகள் வந்தன.  தமிழக மலைப் பகுதியான ஆசனூர் செக்போஸ்டில் இருந்த தமிழக போலீசார் கர்நாடகா பஸ்களை தடுத்து நிறுத்தினர்.

காவிரி பிரச்சனையால் ஏற்பட்ட கொந்தளிப்பு தமிழகத்தில் இன்னமும் தணியவில்லை. ஆகவே அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்று கூறி கர்நாடகா பேருந்துகளை மீண்டும் அம்மாநிலத்துக்கே அனுப்பி வைத்தனர். அந்த பேருந்துகளில் வந்த பயணிகள் தமிழக பேருந்துகள் மூலம் சத்தியமங்கலம் வந்து சேர்ந்தனர்.

இதுவரை கன்னட அமைப்பினர் போராட்டத்தால் தமிழக வாகனங்கள் அம்மாநிலத்திற்கு செல்ல முடியாத நிலை நிலவியது.

தற்போது தமிழகத்தில் போராட்டகரமான சூழல் நிலவுவதால் கர்நாடக பஸ்கள் தமிழகத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி