சென்னை,
காவிரி பிரச்சினை குறித்து   திமுக எம்.பிக்கள் இன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க இருக்கின்றனர்
காவிரி விவகாரத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை திமுக எம்.பி.க்கள் இன்று நேரில் சந்தித்து முறையிட உள்ளனர்.
இதற்காக திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பேசிய கனிமொழி, தமிழகத்திற்குரிய நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
kanimozhi_l__large
காவிரியில் தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், அதை மதிக்காமல் கர்நாடக அரசு முரண்டு பிடித்து வருகிறது. அதன் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதன் காரணமாக  சில தினங்களுக்கு முன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் காவிரி பிரச்சினை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்ட திமுக முயன்று வருகிறது.