காவிரியில் தண்ணீர் திறக்க கோரி கர்நாடக முதல்வரை சந்திக்கிறார் தமிழக முதல்வர்

சென்னை,

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க தமிழக முதல்வர் திட்ட மிட்டுள்ளார். அதையொட்டி, அவரை சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் நேரம் கேட்ட கடிதம் எழுதப்பட்டுள்ளது.

உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், காவிரியில் தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதன் காரணமாக தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையிலி, டெல்டா பாசன  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்கக்கோரி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க விரும்புவதாகவும், அதற்காக நேரம் ஒதுக்கக்கோரி தமிழக முதல்வர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக முதல்வர் நேரம் கொடுத்ததும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன், டெல்லி மாவட்ட அமைச்சர்களுடன் உடன் சென்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.