காவிரி தீர்ப்பு: ஏமாற்றம் அளிக்கிறது! அதிமுக எம்.பி.

--

டில்லி:

காவிரி வழக்கில் உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பு தமிழகத்திற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அதிமுக எம்.பி.யான நவநீதி கிருஷ்ணன் கூறி உள்ளார்.

காவிரி மேல்முறையீட்டு வழக்கில், தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீரை 177.25 டிஎம்சியாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய தீர்ப்பை கர்நாடக வரவேற்றுள்ள நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் குறைக்கப்பட்டது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன், வழக்கில் தண்ணீர் குறைத்திருப்பது தமிழகத்திற்கு ஏமாற்றத்தை அளிப்பதாகவும், இதுகுறித்து தமிழக அரசுடன் ஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார்.