டில்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படுமா?

டில்லி:

ச்சநீதி மன்ற தீர்ப்புப்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் கூட்டம்  மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று  மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேன் தலைமையில் டில்லியில் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கர்நாடகாவுக்கு மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கி உள்ளது குறித்து தமிழக அரசு கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மேகதாது அணை விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை என்ன சொல்கிறது என்பது தெரிய வரும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி  தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த மே மாதம் 18ந்தேதி உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படுவது குறித்து மத்திய அரசு  அரசிதழில் வெளியிட்டது. அதன் காரணமாக  காவிரி நீர் தொடர்பான அனைத்து விவரங்களையும் கவனிக்கும் அதிகாரம் மிக்க அமைப்பாக  காவிரி மேலாண்மை ஆணையம்  உருவானது.

அதைத்தொடர்ந்து ஆணையத்தில் மாநிலங்கள் சார்பாக உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, மாதம் தோறும் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த மாதக்கூட்டம் இன்று ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காவிரி நீர் திறப்பது குறித்தும், கர்நாடகாவுக்கு மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள விவகாரம் குறித்தும் தமிழக அரசு கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலர் எஸ்.கே. பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோருடன் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உறுப்பினர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

கூட்டத்தில் மேகதாது குறித்து ஆலோசனை நடைபெறும் என நம்பப்படுகிறது.