காவிரி மேலாண்மை வாரியம்: விருதுநகர் அருகே ஒருவர் தீக்குளிப்பு


விருதுநகர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி விருதுநகர் அருகே சரவணன் சுரேஷ் என்பவர் தீக்குளித்தார்.

ஏற்கனவே ஈரோட்டில் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், தற்போது விருதுநகரை சேர்ந்த ஒருவர் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக கடந்த 12 நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி கருப்பு கொடி காட்டும் போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், விருதுநகரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சரவணன் சுரேஷ்(50) என்பவர் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

பலத்த தீக்காயமடைந்த சுரேஷை அக்கம் பக்கத்தினர் மட்டு  மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

You may have missed