டில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறத்தி அதிமுக எம்.பி.கள் 7-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

பாராளுமன்ற துணை சபாநாயகர்  தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.கள் நாடாளுமன்ற வளாகத்தில் 7-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதுபோல,  ஆந்திரப்பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆதார் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக நாடாளுமன்ற வளாகம் முழுவதும் போராட்ட கோஷங்களாக காணப்பட்டது.

அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக எம்.பி.க்கள்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இரு அவைகளிலும்  முழக்கம் எழுப்பினர்.

இதனால் மக்களவை 12 மணி வரையிலும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தெலுங்குதேசம், காங்கிரஸ் உள்பட  எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.