டெல்லி:
காவிரி மேலாண்மை வாரியத்தை தற்போது அமைக்க சாத்தியமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததும், அதைதொடர்ந்து 4 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
cauvery
இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய நீர்வளத்துறையில் இருந்து தகவல் வந்தது. அதையொட்டி தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகள் தங்களது மாநிலங்கள் சார்பாக மேலாண்மை வாரிய உறுப்பினர்களை நியமித்து தகவல் அனுப்பினார்கள்.
இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை டைரக்டர் சசிசேகரும் மேலாண்மை வாரியம் உடனே அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
ஆனால், தற்போது திடீரென மத்திய அரசு அந்தர் பல்டி அடித்துள்ளது. இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,  காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது. தற்போது அமைக்க சாத்தியமில்லை என்றும்,
வாரியம் அமைக்கும் உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும், மேலும்  வாரியம் அமைக்குமாறு 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட முடியாது என்று கூறி உள்ளது.  வாரியம் என்பது பரிந்துரை மட்டுமே என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
மத்திய அரசின் இந்த மனு மீது நாளை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.  மத்திய அரசின் இந்த மனு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.