புதுச்சேரி :

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

புதுச்சேரியில் ரயிலை மறித்து ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அறிவித்த காலக்கெடுவான மார்ச் 29க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடித்த மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக வரலாறு காணாத அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சாலை மறியல், ரயில் மறியல், உண்ணவிரதம்,  விமான நிலையம் முற்றுகை, மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை  என பல்வேறு போராட்டங்ளை அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள்  முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டங்களில் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள், கல்லூரி மாணவர்களும் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று நடைபெற்ற போராட்டத்தில், புதுச்சேர சட்டக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்று,  ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ரயில் நிலையத்திற்கு மாணவர்கள்,  மாணவிகள்  புதுவையில் இருந்து விழுப்புரம் செல்லக்கூடிய பயணிகள் ரயிலை மறித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பலர் ரயில் தண்டவாளத்திலும், ஒருசிலர் ரயில் எஞ்சினின் மீது ஏறி நின்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,  உச்சநீதிமன்றம் அறிவித்தபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடு மத்திய அரசே என்று குரல் எழுப்பினர்.

மாணவர்களை போலீசார் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்திய நிலையில் ரயில் நிலைய நடைமேடையில் நின்றபடியே மாணவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து கீழே இறங்கச் செய்தனர்.

தைத்தொடர்ந்து, திமுக மற்றும் தோழமை கட்சியினர் சார்பாகவும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் இருந்து கோரக்பூர் செல்லும் ரயிலை மறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் காரணமாக புதுச்சேரி ரயில் நிலையத்தில குவிந்த   திமுக, காங்கிரஸ் தொண்டர்கள், தண்ட வாளத்தில் நின்று ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த  நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த விழுப்புரம் – கோரக்பூர் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.