காவிரி ஆணைய உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது…..முதல்வர் பழனிச்சாமி

சென்னை:

காவிரியில் ஜூலை மாதம் 31ம் தேதி டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு இன்று கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் பழனிசாமி இன்று சட்டமன்றத்தில் பேசுகையில், ‘‘ தமிழகத்துக்கு 31.24 டிம்.எம்.சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆகஸ்டுக்கு 45.9 டிஎம்.சி செப்டம்பருக்கு 36.76 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா தர வேண்டும். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 177.25 டிஎம்சி காவிரி நீர் கிடைத்தே தீரும்’’ என்றார்.