சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் என்று தமிழக அரசு கேட்டிருந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் என்று, காவிரி வரைவு திட்டம் தொடர்பான அமைப்புக்கு பெயரிட்டு உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு அளித்து உள்ளது.

அதில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே அனைத்து விதமான அதிகாரங்களும் இருப்பதாக கூறி உள்ளது.

இதற்கு தமிழக விவசாயிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருப்பதால் தமிழகத்தற்கு நன்மை கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்:

உச்சநீதி மன்றம் கூறியது போல் ஆணையத்தை உடனே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், தமிழகத்துக்கு குறைக்கப்பட்ட நீரை எந்த மாதத்தில் குறைப்பது என்று பேசி தீர்க்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்

டெல்டா மாவட்டமே வறண்டு போயுள்ள நிலையில், காவிரி நீர் கிடைக்க ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையம் சர்வ வல்லமை படைத்ததாக இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம் அதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் அளித்ததா? என்பது தெரியவில்லை . உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்த குறை இதில் இருக்கக் கூடாது. இந்த ஆணையம் மீது நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? என்பது கேள்வி அல்ல. உச்சநீதிமன்றத்துக்கு நம்பிக்கை இருக்கிறதா? என்பதுதான் கேள்வி. காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.

கம்யூனிஸ்டு  முத்தரசன்

காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுவதுமாக செயல்படுத்த வேண்டும் என்றும் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

பாஜ தமிழிசை:

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தை கிடப்பில் போட்ட காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு எவ்வளவோ விமர்சனம் செய்தார்கள். கர்நாடகாவில் பாஜக வந்தால் நியாயமான தீர்வும், நீர் பங்கீடும் தமிழகத்திற்கு கிடைக்கும்.

தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர்  அய்யாக்கண்ணு

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில் ஆணையத்துக்கும் வாரியத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரிய வேண்டும் என அய்யாக்கண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசிதழில் உடனே வெளியிட்டு தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்

விவசாய சங்க தலைவர்  பி.ஆர்.பாண்டியன்.

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான உச்சநீதி மன்ற தீர்ப்பை  அரசிதழில் உடனே வெளியிட்டு தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்

மணியரசன்

காவிரி விவகாரத்திற்காக நடைபெற்ற போரட்டங்களால் மத்திய அரசு பணிந்ததுள்ளதாக தமிழ்தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் கூறியுள்ளார். மத்திய அரசு காவிரி விவகாரத்தில் எப்படி செயல்படுகிறது என ஜுன், ஜுலையில் தான் தெரியும் என்றார்.