காவிரிக்காக சீமான் போராட்டம்: இளைஞர் தீக்குளித்தார்

 

சென்னை:

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவைக் கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியின் போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகா தர மறுத்து வருகிறது. இதைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று காவிரி உரிமை மீட்பு பேரணி நடைபெற்றது.

sem
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தொடங்கி புதுப்பேட்டை வரை இந்த பேரணி நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சேரன், அமீர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இப்பேரணி புதுப்பேட்டை அருகில் வரும்போது, இளைஞர் ஒருவர் திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டார்.   கர்நாடகாவை எதிர்த்து முழக்கமிட்டபடியே நெருப்பை தன் மீது பற்ற வைத்துக்கொள்ள முயன்றார்.  அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுத்து காப்பாற்றினர்.

ஆனாலும் அவருக்கு தீக்காயம் பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீக்குளிக்க முயற்சித்த இளைஞர் மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.