டெல்லி:
காவிரி பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் நாளை டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தை புறக்கணிக்க தமிழக அரசை கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.
karuna
காவிரி நீர் பிரச்சினையில் கூட்டாட்சி தத்துவத்தை மதித்து மத்திய அரசு ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் இருமாநில அரசு அதிகாரிகளும் பங்கேற்று சுமூகத்தீர்வு காண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தமிழக- கர்நாடக அரசு அதிகாரிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் நாளை (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இதில் இரு மாநில அரசு அதிகாரிகளும் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு மத்திய நீர்வள அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் ராமமோகன்ராவ், பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இந்தகூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருணாநிதி, வைகோ எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி:
அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற இருக்கும் காவிரி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்க கூடாது என கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக அமைச்சர் உமாபாரதி பேசி வருவதாக குற்றச்சாட்டியிருக்கும் கருணாநிதி  இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தை நாளை பிரதமர் மோடி தலைமையில் நடத்திட வலியுறுத்தியுள்ளார்.
மேலும் காவிரி பிரச்சினையில் ஏற்கனவே இரண்டு முறை தவிர்த்தது போல பிரதமர் மோடி இந்த முறையும் தவிர்த்துக் கொள்ளக் கூடாது என அவர் வலியுறுத்தியிருக்கிறார்.